நாகாலாந்து நிலக்கரி சுரங்க விபத்தில் 6 பேர் பலி!
நாகாலாந்தில் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெற்ற நிலக்கரி சுரங்கப் பணியின்போது ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலியாகினர்.
நாகாலாந்தில் உள்ள ஓக்கா மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற நிலக்கரிச் சுரங்கப்பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையில் காயப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தொழிலில் ஈடுபட்டிருந்த அனைத்து தொழிலாளர்களும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள் என அந்தப் பகுதி எம்எல்ஏ அச்சும்பேமோ கிக்கோன் தெரிவித்துள்ளார். காயப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக திமாப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பிகாரில் அரசியல் மாற்றம்: பாஜக எம்எல்ஏ வெளியிட்ட முக்கிய தகவல்
மீட்புப் பணிகளில் மேற்பார்வையில் ஈடுபட்டுள்ள கிக்கோன் இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான சுரங்கப்பணிகளைத் தடுக்க மாநிலத் துறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.