முகப்பு
ஹர்தீப் சிங் புரி
இந்தியா

100 புதிய பயோகேஸ் உற்பத்தி நிலையங்கள்: மத்திய அமைச்சர்

புதிதாக 100 பயோகேஸ் நிலையங்களை அமைக்கவுள்ள திட்டத்தைத் தெரிவித்தார் மத்திய அமைச்சர்.

இந்தியா

100 புதிய பயோகேஸ் உற்பத்தி நிலையங்கள்: மத்திய அமைச்சர்

புதிதாக 100 பயோகேஸ் நிலையங்களை அமைக்கவுள்ள திட்டத்தைத் தெரிவித்தார் மத்திய அமைச்சர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
ஹர்தீப் சிங் புரி
பகிர்:

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, உத்தர பிரதேசத்தில் புதிதாக 100 உயிரி எரிவாயு (பயோகேஸ்) உற்பத்தி நிலையங்கள் அமைக்கவிருப்பதாக தெரிவித்தார்.

லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த ஏழு ஆண்டுகளாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதாகவும் ஒவ்வொரு துறையிலும் சிறப்பான பணிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

புடாவுனில் அமைக்கப்பட்ட பயோகேஸ் எனப்படும் சிபிஜி உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக புறப்பட்ட அமைச்சர், எட்டு மாவட்டங்களில் உற்பத்தி நிலையங்கள் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளதைக் குறிப்பிட்டார்.

37 உற்பத்தி நிலையங்களுக்கான இடத்தேர்வு நிறைவடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ‘வீணானவற்றை வளமாக்கும்’ இலக்கின் பகுதியாக இந்த உயிரி  எரிவாயு திட்டம் இருக்கும் என முன்பு ஹர்தீப் தெரிவித்தார்.

தில்லியின் மாசு கட்டுபாட்டுக்கு மட்டுமல்ல விவசாயிகளின் வருமான அதிகரிப்புக்கும் பயோகேஸ் உதவும் என குறிப்பிட்டார்.

புடாவுன் உற்பத்தி நிலையம் 50 ஏக்கரில் ரூ.135 கோடி செலவில் அமைந்துள்ளது. இதன் மூலம் 14 டன் அளவுக்கு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை நாள்தோறும் உற்பத்தி செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →