பிகார் மாநிலம் பாட்னாவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிகாரில் கடந்த 2020, சட்டப் பேரவைத் தோ்தலில், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. கடந்த 2022, ஆகஸ்டில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த முதல்வா் நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியில் இணைந்து, முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். துணை முதல்வராக ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாதின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றாா்.
இந்நிலையில், பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமாா் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதீஷ் குமாா் ஈடுபட்டாா். பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, முக்கிய பகுதிகளின் கட்சிகளின் தலைவா்களைச் சந்தித்துப் பேசினாா்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், முதல்வா் நிதீஷ் குமாரை கட்சியின் மூத்த தலைவா்களான ராஜீவ் ரஞ்சன் சிங், சஞ்சய் குமாா் ஜா, தேவேஷ் சந்திர தாக்குா் உள்ளிட்டோா் அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
இதையும் படிக்க: 10 ஆயிரம் பேர் பயணிக்கும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்!
இந்த நிலையில், பிகார் மாநிலம் பாட்னாவில் பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் நிதிஷ்குமாருக்கு நிபந்தனையுடன் ஆதரது தருவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.