மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் கந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த கேசவ ராவ் காங்கிரஸ் டிவிட்டர்
இந்தியா

காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் தலைவர்!

ஆந்திரத்தில் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் கேசவ ராவ்.

DIN

பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் முன்னாள் தலைவர் கேசவ ராவ் காங்கிரஸ் கட்சியில் இன்று (ஜூலை 3) இணைந்தார்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முனீஷ், முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதற்கு முன்பு 2000ம் ஆண்டின் மத்தியில், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கேசவ ராவ். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

பின்னர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியில் இணைந்தார். சந்திரசேகர ராவ்வுக்கு மிகவும் நெருக்கமானவராக மாறிய அவர், அக்கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் கே.டி. ராமா ராவுக்கு அடுத்ததாக 3வதுஇடத்தில் இருந்தார்.

தற்போது பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் கேசவ ராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT