தற்கொலை செய்துகொண்ட துணை ஆய்வாளர் ஸ்ரீராமுல ஸ்ரீனிவாஸ் 
இந்தியா

காவல்துறை உயரதிகாரிகள் தொந்தரவு - பட்டியலினத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளர் தற்கொலை!

தெலங்கானாவில் உயரதிகாரிகள் தொந்தரவின் காரணமாக காவல்துறை துணை ஆய்வாளர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தெலங்கானாவில் காவல் நிலையத்தில் உயரதிகாரிகளின் தொந்தரவால், பட்டியலினத்தைச் சேர்ந்தக் காவல்துறை துணை ஆய்வாளர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா பத்ராரி கொத்தகுடெம் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வராபேட்டை காவல்நிலையத்தில் காவல்துறை துணை ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஸ்ரீராமுல ஸ்ரீனிவாஸ் (38). இவர், தனது உயரதிகாரி மற்றும் சில காவலர்களால் பணியிடத்தில் தொந்தரவை அனுபவித்து வந்துள்ளார்.

மேலும், அந்த காவல்துறை அதிகாரிகள், ஸ்ரீராமுல ஸ்ரீநிவாஸை லஞ்சம் வாங்கும் அதிகாரியைப் போல சித்தரித்து நாளிதழ்களில் அவருக்கு எதிராக செய்தி வெளியிட வைத்துள்ளனர். அவருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் தலித் என்பதால் சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீநிவாஸ் மனுகுரு காவல் நிலையத்திலிருந்து அஸ்வரபேட்டை காவல் நிலையத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம்தான் மாற்றுதலாகி வந்துள்ளார்.

மூத்த அதிகாரி மற்றும் உடன் பணிபுரிந்த அதிகாரிகள் 4 பேரின் குற்றச்சாட்டுகள் மற்றும் தொடர்ச்சியானத் தொந்தரவுகளைத் தாங்க முடியாமல் கடந்த ஜூன் 30 அன்று தற்கொலை செய்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார்.

பின்னர், சிகிச்சைக்காக வாரங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாகும் தருவாயில் இருந்த காவல்துறை துணை ஆய்வாளரிடம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் தற்கொலைக்கான காரணம் வாக்குமூலமாகப் பெறப்பட்டுள்ளது.

ஒரு வாரமாக உயிருக்குப் போராடி வந்த அவர் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இறந்த காவலர் ஸ்ரீநிவாஸுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

அவருடைய மனைவி கிருஷ்ணவேனி அளித்த புகாரின் பேரில், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜிதேந்தர் ரெட்டி, கான்ஸ்டபிள்கள் சன்யாசி நாயுடு, சுபானி, சேகர் மற்றும் சிவ நாகராஜூ ஆகியோர் மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை துணை ஆய்வாளரின் தற்கொலைக்கு காரணமானவர்களைக் கடுமையாகத் தண்டிக்குமாறு பல்வேறு தலித் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

மல மகாநாடு என்ற தலித் அமைப்பின் தலைவரான பில்லி சுதாகர் கூறுகையில், “காவல்துறை அமைப்பில் தலித் அதிகாரிகளுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் தொந்தரவுகள் தற்போது அதிகரித்து வருகின்றன” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT