முகப்பு
இந்தியா

ஐபோன் கேட்ட இளைஞர் தற்கொலை!

ஐபோன் கிடைக்காத மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை

Updated On : 10 ஜூலை, 2024 at 11:57 AM
பகிர்:

ஐபோன் கேட்டு வாங்கித் தராததால், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பையில் காமோத்தே பகுதியில் வசித்து வந்த 18 வயதான சஞ்சய் வர்மா, தனது தந்தையிடம் ஐபோன் கேட்டு, வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், சஞ்சய் கேட்ட ஐபோனின் விலை ரூ. 1.5 லட்சம் என்பதால், சஞ்சய்யின் தந்தை விலைகுறைவான வேறொரு மொபைலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதனால் மன உளைச்சலான சஞ்சய் வர்மா, கடந்த திங்கள் கிழமை இரவு 11.30 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சஞ்சய் வர்மாவின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →