முகப்பு
இந்தியா

ஷ்ரேயா கோஷல் பாடலின் பின்னணியில்.. உணர்ச்சிவயப்பட்ட மணமகள் ராதிகா மெர்ச்சன்ட்!

ஷ்ரேயா கோஷல் பாடலின் பின்னணியில் திருமண மண்டபத்துக்குள் நுழைந்த மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் உணர்ச்சிவயப்பட்டார்.

Updated On : 13 ஜூலை, 2024 at 7:13 AM
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட ஆன்டிலியா இல்லம்.
பகிர்:

முகேஷ் அம்பானி மகன் ஆனாந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண வைபவம் மும்பையில் நேற்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது. ஷ்ரேயா கோஷலின் பாடல் பின்னணியில், மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் மண்டபத்துக்குள் நுழையும்போது உணர்ச்சிவயப்பட்டார்.

வெள்ளிக்கிழமை, மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற விழாவில், மணமகன் ஆனந்த், தனது பெற்றோரின் கையைப் பிடித்துக்கொண்டு திருமண மண்டபத்துக்குள் நுழைந்தார். மணமகனுடன் அவரது சகோதரர் மற்றும் சகோதரி மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணையுடன் வந்தனர்.

அப்போது, ராதிகா மெர்ச்சன்ட் தனது தந்தை விரென் மெர்ச்சண்ட் கையைப் பிடித்துக்கொண்டு திருமண மண்டபத்துக்கு வருகிறார். அவரது வருகையை, மண்டபம் முழுக்க நிறைந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்க, அந்த தருணத்தில் அவர் உணர்ச்சிவயப்பட்டுக் காணப்படுகிறார்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இவ்விழாவில், பல்வேறு அரசியல் தலைவர்களும், நடிகர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். ஒரு சில நாள்களுக்கு முன்பு தொடங்கிய திருமண வைபவம், ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு விழா நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →