முகப்பு
இந்தியா

பாஜக முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

பாஜக அரசு அமைந்துள்ள மாநில முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை..

இந்தியா

பாஜக முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

பாஜக அரசு அமைந்துள்ள மாநில முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை..

Updated On : 27 ஜூலை, 2024 at 5:20 PM
பகிர்:

பாஜக அரசு அமைந்துள்ள மாநில முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோர் இன்று(ஜூலை 27) ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, ஒடிஸா முதல்வர் மோகன் சரன் மஜ்ஜி உள்பட மத்திய பிரதேசம், உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம், கோவா, ஹரியானா, மணிப்பூர், சத்தீஸ்கர் ஆகிய மாநில முதல்வர்களும் துணை முதல்வர்களும் பங்கேற்றனர்.

மத்திய அரசின் திட்டங்களை மாநிலங்களில் செயல்படுத்துதல், சிறந்த நிர்வாகத்தை கடைபிடித்தல் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கடைசியாக மக்களவை தேர்தலுக்கு முன், பிப்ரவரி மாதம் பாஜக முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →