ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 
இந்தியா

கட்டணத்தைக் குறைத்த ஜியோ நிறுவனம்!

ஜியோ பயனாளர்கள் குறைந்துவரும் நிலையில் நடவடிக்கை

DIN

ஏர்டெல் நிறுவனத்தைவிட கட்டணத்தைக் குறைத்தது ஜியோ நிறுவனம்.

ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தை 26 சதவிகிதம் வரையில் அண்மையில் உயர்த்தியிருந்தன.

இதனால், ஜியோ, ஏர்டெல் பயனாளர்கள் பலரும் பிஎஸ்என்எல் திட்டத்துடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் கட்டணத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை முழுமையாக வழங்காததால், பயனாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறுவதற்கு யோசிக்கின்றனர்.

இதனையடுத்து, ஜியோவின் பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. அதனை ஈடுசெய்யும் விதமாக, ஜியோ தனது மாதாந்திர திட்டத்தின் கட்டணத்தை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதாவது, ஜியோ தனது பயனாளர்களுக்கு ரூ.189 திட்டத்தினை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால், இந்த திட்டமானது ஏர்டெலில் ரூ.199ஆக உள்ளது. இந்த திட்டத்தில் அளவிலா அழைப்புகளும், தினமும் 100 இலவச குறுஞ்செய்திகளும் மற்றும் 2 ஜிபி டேட்டாவுடன் 4ஜி சேவையை வழங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

SCROLL FOR NEXT