அமைச்சர் அதிஷி Center-Center-Delhi
இந்தியா

பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவரப்படும்: அதிஷி

அதிகாரிகள் யாரேனும் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

PTI

தில்லியில் உள்ள பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தைத் தில்லி அரசு கொண்டுவரும் என்று அமைச்சரவை அமைச்சர் அதிஷி தெரிவித்தார்.

செய்தியாளர்களுடன் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

சட்டத்தை உருவாக்க அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு பயிற்சி மையங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.

இந்தச் சட்டத்தில் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதி, கட்டணக் கட்டுப்பாடு மற்றும் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கும். இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்தும் கேட்கப்படும் என்றார்.

தில்லி மாநகராட்சி சட்டங்களை மீறி அடித்தளங்களைப் பயன்படுத்தும் பயிற்சி மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜிந்தர் நகர், முகர்ஜி நகர், லக்ஷ்மி நகர், ப்ரீத் விஹார் ஆகிய இடங்களில் உள்ள 30 பயிற்சி மையங்களின் அடித்தளங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 200 பயிற்சி மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பழைய ராஜிந்தர் நகர் சம்பவம் தொடர்பான நீதிபதி விசாரணை அடுத்த 6 நாள்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த சம்பவத்தில் அதிகாரிகள் யாரேனும் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோத கட்டட பயன்பாடு ராஜிந்தர் நகர் சோகத்திற்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

SCROLL FOR NEXT