மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் முடிவுகள் அறிவிக்கப்பட தாமதமான நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை விட 1,79,907 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஒடிஸாவில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்த பிஜு ஜனதா தளம் பெரும்பான்மையான இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது. 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கன்னோஜ் தொகுதியில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 1.70 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 2.15 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் கள்ளக்குறிச்சியில் மலையரசன் 53,784 வாக்கு வித்தியாசத்திலும் பெரம்பலூர் அருண் நேரு 3.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விளவங்கோடு பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பா்ட் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் 2,05,664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 4,27,677.
தென்காசியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 4,25,679 வாக்குகள் பெற்று அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமியை காட்டிலும் 1.9 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கேரளத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ஓரிடத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் கே.சுப்புராயன் 1,25,928 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருநெல்வேலியில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் நயினார் நாகேந்திரனை காட்டிலும் 1,65,620 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய சென்னையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் 1,69,159 வாக்குகள் பெற்ற நிலையில் தயாநிதி மாரன் 4,13,848 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
சிபிஐஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் ஒட்டுமொத்தமாக 6,70,149 வாக்குகள் பெற்று திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் முகமது முபாரக் 2,26,328 வாக்குகள் பெற்றுள்ளார்.
அபரிதமான வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் வெற்றி பெற்றுள்ளார். 58.29 சதவிகிதம் வாக்குகள் அவருக்கு பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் க. செல்வம் 2.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 5,86,044 வாக்குகள் அவர் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 3,64,571 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் எண்ணப்பட்டு வருகின்றது.
சூரத் மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியின்றி பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜக 130, காங்கிரஸ் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகித்துவரும் நிலையில் பிரதமர் மோடி தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளார். பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
அயோத்தி அமைந்துள்ள உத்தரப் பிரதேசத்தின் ஃபைசாபாத் தொகுதியில் சமஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரான லல்லு சிங் தோல்வியை தழுவியுள்ளார்.
நாகப்பட்டினம் தொகுதியில் சிபிஐ கட்சி வேட்பாளர் செல்வராஜ் 2,08,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி தொகுதியில் மதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட துரை வைகோ 3,13,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, தொடர்ந்து 3-வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. மக்களின் அன்பிற்கு அடிபணிகிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், கடந்த 10 ஆண்டு நல்லாட்சி தொடரும் எனப் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்கிறார் பாலிவுட் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத்.
தருமபுரி, நீலகிரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அ.ராஜா 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தஞ்சாவூர் தொகுதியில் முரசொலி 3,19,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தருமபுரியில் பாமக வேட்பாளர் செளம்யா அன்புமணிக்கும் திமுக வேட்பாளர் அ. மணிக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் செளம்யா அன்புமணியை பின்னுக்குத் தள்ளி 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் மணி வெற்றி பெற்றுள்ளார்.
நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உள்ள படத்தை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
முன்னாள் ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட், “இந்த தேர்தல்- தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மக்களுக்குமான போட்டி. இதில் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். ராஜஸ்தானின் முடிவுகள் நான் முன்பே சொன்னதுபோல அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மக்கள் மீதும் கட்சித் தொண்டர்கள் மீதும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்”
ராஜஸ்தானின் 25 மக்களவை தொகுதிகளில் 14 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக மதுரை தொகுதி எம்.பி. ஆகிறார் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சு.வெங்கடேசன்.
கடலூரியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட எம்.கே.விஷ்ணுபிரசாத் 1,85,896 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் குறைந்தது 7 மக்களவை தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டதாக வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தெற்கு சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, மதுரை, நீலகிரி, ராமநாதபுரம் மற்றும் தேனி தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் அதிமுக இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. அதிமுகவின் கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 5 தொகுதிகளிலும் எஸ்டிபிஐ ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் நாளை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒருங்கிணைந்த ஜனதா தளம் சார்பில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி பாஜக 245 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிற நிலையில் ஆட்சியமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவு பாஜக தேவைப்படுகிறது.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனை மற்றும் லோக் ஜனஷக்தி கட்சி ஆகியவை முறையே ஆறு மற்றும் ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி தோல்வியை சந்தித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பணிகளை 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசுகள் செய்ததாகவும் அவர்களுக்கு தனது நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அமேதி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மக்களின் நம்பிக்கை இழந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
அரசியல் சாசனத்தைக் காக்க மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போதைய தீர்ப்பு அதைக் காக்க உதவியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்றும் குறிப்பிட்டார் அவர்.
மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்திருப்பது மோடிக்கு எதிரான தீீர்ப்பு என்றும் ஜனநாயகத்துக்கான வெற்றி என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
தில்லியில் தற்போது செய்தியாளர்களுடன் பேசும் அவர், இது மோடியின் தார்மிகத் தோல்வி என்றும் குறிப்பிட்டார்.
பேட்டியின்போது காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரிஜ்பூஷண் மகன் கரன் பூஷண் சிங் வெற்றி பெற்றார்.
திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலில் ஹமீர்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் அனுராக் தாக்குர் வெற்றி பெற்றார்.
ஹிமாச்சலில் மண்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான கங்கனா ரணாவத்தின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் பசவராஜ் பொம்மை, பிரஹலாத் ஜோஷி வெற்றி பெற்றனர்.
குஜராத்தில் காந்திநகர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் அமித் ஷா வெற்றி பெற்றார்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்றார் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பெர்ஹாம்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் யூசுப் பதான் தோற்கடித்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெற்று வருவதாக காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி புகார் மனு அளித்துள்ளார்.
ஹரியாணாவில் பாஜக, காங்கிரஸ் தலா 5 தொகுதிகளில் முன்னிலை
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நாளை புது தில்லியில் நடைபெறலாம் என்று ஷரத் பவார் அறிவித்துள்ளார்.
பாஜகவின் ராமர் கோயில் அரசியல் வெற்றிபெறவில்லை, வட இந்தியாவில் மோடி அலை இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிகத்தில் 3 மணி நிலவரப்படி, அதிமுக 29 இடங்களில் இரண்டாவது இடத்திலும், பாஜக 10 தொகுதிகளில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
திருவனந்தபுரத்தில் சசி தரூர் வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் தொகுதியில் 16 ஆவது சுற்றில் 2,41,962 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
திமுக - ச. முரசொலி - 3,86,661
தேமுதிக - பெ. சிவநேசன் - 1,44,699
பாஜக - எம். முருகானந்தம் - 1,34,152
நாதக - எம்.ஐ. ஹூமாயூன் கபீர் - 93,337
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் எச்.டி. குமாரசாமி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் வெற்றி பெற்றதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவர் தனது சமூக வலைத்தளத்தில், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திரிச்சூரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மக்களவைத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் 6 சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
காஷ்மீர், லடாக், டாமன்-டையூ உள்ளிட்ட 6 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலை பெற்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்களுடன் முக்கிய அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமித் ஷா முன்னிலை
குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 6.15 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அமித் ஷா - 7.96 லட்சம் வாக்குகள்
காங்கிரஸ் வேட்பாளர் சோனல் பட்டேல் - 1.81 லட்சம் வாக்குகள்.
குஜராத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் 14 வது சுற்று முன்னிலை நிலவரம்.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 3,20,534 வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 2,21,082 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 56,740 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சத்யா 59,781 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதில் ராபர்ட் புரூஸ் 99,452 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து நான்காவது இடத்தில் அதிமுகவும் இருந்து வருகிறது.
லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
சுயேச்சை வேட்பாளர் 60,365 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 32,195 வாக்குகள் பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
நாடு முழுவதும் 1.92 சதவீதத்தையும், உத்தரப்பிரதேசத்தில் 9.16 சதவீத வாக்குகளையும் பகுஜன் சமாஜ் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை
உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 44 இடங்களிலும், பாஜக தலைமையிலான தேஜகூ 35 இடங்களிலும் முன்னிலை.
காங்கிரஸ் தலைவர் கார்கே, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் புது தில்லியில் நடைபெறவிருக்கிறது.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷரத் பவார், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமாருடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரே பரேலி தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா பெற்றிருந்த வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் ராகுல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறிக்கவிருக்கிறார்.
2.15 மணி நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை விட 2.62 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், முன்னிலையில் இருக்கிறார். தினேஷ் பிரதாப் சிங் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்.
ரே பரேலி தொகுதியில் சோனியா 2004ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் இந்த முறை அவர் மக்களவைக்குப் போட்டியிடாமல் நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ரே பரேலியில் போட்டியிட்டார்.
விழுப்புரம் 7-ஆவது சுற்று முடிவில் 30,719 வாக்குகள் முன்னிலை
விசிக - 162406
அதிமுக - 131687
பாமக - 56667
நாதக - 21331
தஞ்சாவூர் தொகுதியில் 10 ஆவது சுற்றில் 1,52,070 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
திமுக ச. முரசொலி - 2,43,896
தேமுதிக பெ. சிவநேசன் - 91,826
பாஜக எம். முருகானந்தம் - 80,333
நாதக எம்.ஐ. ஹூமாயூன் கபீர் - 60,226
பாஜக பலம் வாய்ந்த மாநிலங்களாகக் கருதப்படும் உத்தரப்பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களில் சற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 236 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒடிசா, தெலங்கானா, கேரளத்தில் முன்னேற்றம் கண்டாலும், ஹிந்தி பேசும் மாநிலங்களில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளன.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் - தேமுதிக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 203 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது முன்னிலையில் உள்ளார்.
தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
ஃபைசாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் பாஜக வேட்பாளரை விட 3000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் 7-ஆவது சுற்று முடிவில் 30,719 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக முன்னிலையில் உள்ளது.
விசிக - 162406
அதிமுக - 131687
பாமக 56667
நாதக - 21331
திமுக 21 தொகுதிகளில் முன்னிலை
காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலை
விடுதலை சிறுத்தைகள் - 2
சிபிஐ - 2
சிபிஎம் - 2
பாமக - 1
28 தொகுதிகளில் அதிமுக 2வதுஇடம்
10 தொகுதிகளில் 10 இரண்டாவது இடம்
காங்கிரஸ் - 229638
பாஜக - 152127
அதிமுக - 40655
நாதக - 44224
வாக்கு வித்தியாசம்- 77511 ( காங்கிரஸ் முன்னிலை)
தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் 8 - 10 தொகுதிகளில் முன்னிலை பெற்று வாக்கு விகிதத்தில் சற்று முன்னேறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், பாஜக 10 சதவீத வாக்குகளை முதல் முறையாக பெற்றுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 10.21 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் 4,68,503 வாக்குகள் பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் நோட்டாவுக்கு 90,000 வாக்குகள் கிடைத்துள்ளன.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறக் காத்திருக்கிறார். அவர் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
12.13 மணி நிலவரப்படி ராகுல் 2,25,691 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பளார் அன்னி ராஜா 96,677 வாக்குகள் பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேஜகூ 238 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதன் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி 33 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திரிணமூல் 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் - 115762
பாஜக - 80219
அதிமுக - 21651
நாதக - 22715
வாக்கு வித்தியாசம்-35543 ( காங்கிரஸ் முன்னிலை)
5வது சுற்று இறுதியில்
திமுக - 131608
அதிமுக - 82841
பாமக - 36847
நாம் தமிழர் - 26943
திமுக வேட்பாளர் செல்வம் 48767 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
நான்காவது சுற்றில் 60,220 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
திமுக ச. முரசொலி - 99,761
தேமுதிக பெ. சிவநேசன் - 39,541
பாஜக எம். முருகானந்தம் - 30,531
நாதக எம்.ஐ. ஹூமாயூன் கபீர் - 26,553
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 15,195 வாக்குகள் பெற்று முன்னிலை.
இரண்டாவது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் 21 ஆயிரத்து 18 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 12 1966 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நரசிம்மன் 11,750 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் 4076 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 15,195 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்
அரசியல் கட்சிகள் பெற்ற விவரம்-5ஆவது சுற்று
காங்கிரஸ்-146899
தேமுதிக-45757
பா.ஜ.க-41861
நாம் தமிழர்-19506
தொடர்ந்து காங்கிரஸ்-101142 வாக்குகள் பெற்று முன்னிலை
ஒடிசா பேரவைத் தேர்தலில் காண்டாபாஞ்சி தொகுதியில் நவீன் பட்நாயக் பின்னடைவு, ஹிஞ்ஜிலி தொகுதியில் முன்னிலை.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் 2.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலை பெற்றுள்ளார்.
அமித் ஷா - 2.99 லட்சம் வாக்குகள்
சோனல் பட்டேல் - 68,000
2019 தேர்தலில் அமித் ஷா 5.57 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகத்தில் முன்னேறி வருகிறது. தமிழகத்தில் திமுகவும் கேரளத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் - 21
பாஜக - 11
காங்கிரஸ் - 2
மார்க்சிஸ்ட் கம்யூ - 1
தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர். திருச்சி நாடாளுமன்ற மதிமுக வேட்பாளர் துறை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
தற்போது வரை முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன்.
தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர்.
என் தந்தையிடம் இதுவரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை, எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி பெற்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன் எனக் கூறினார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 7,642 வாக்குகள் பெற்று முன்னிலை.
முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் 20,866 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 13,224 வாக்குகளும் பாஜக வேட்பாளர் சி. நரசிம்மன் 9524 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் 3,508 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
முதல் சுற்றில் திமுக 16,441 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
திமுக ச. முரசொலி - 26,134
தேமுதிக பெ. சிவநேசன் - 9,693
பாஜக எம். முருகானந்தம் - 8,150
நாதக எம்.ஐ. ஹூமாயூன் கபீர் - 7,451
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், ஸ்மிருதி இரானி பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் முன்னிலையில் உள்ளார். இவர் ஸ்மிருதி இரானியை விட 3 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
மதிமுக - துரைவைகோ : 26186
அதிமுக - கருப்பையா : 12981
அமமுக - செந்தில்நாதன் : 4047
நாம் தமிழர் - ராஜேஸ் : 5847
13,205- வாக்குகள் பெற்று மதிமுக முன்னிலை
முன்னிலை நிலவரம்...
திமுக - 14
காங்கிரஸ் - 7
விடுதலை சிறுத்தைகள் - 2
மார்க்சிஸ்ட் கம்யூ. - 2
பாமக - 1
அதிமுக - 1
முதல் சுற்று
சிஎன் அண்ணாதுரை (திமுக) 27,424
கலியபெருமாள் (அதிமுக) 15,784
அஸ்வத்தாமன் (பாஜக) 7190
ரமேஷ்பாபு (நாம்தமிழர்) 4342
திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 11,640 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பிரதமர் மோடி 28719 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 400 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 28,283 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முதல் சுற்று நிறைவு
திமுக - 27368
அதிமுக - 17122
பாமக - 8409
நாம் தமிழர் - 5778
திமுக வேட்பாளர் செல்வம் 10246 வாக்கு முன்னிலை
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி (இடைத்தேர்தல்) காங்கிரஸ் வேட்பாளர் முதல் சுற்றில் 2660 வாக்குகள் முன்னிலை
வேலூர் மக்களவைத் தொகுதி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 11,834 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை திமுக - 29501 பாஜக - 17667 அதிமுக - 12536
ராபர்ட் புரூஸ் ( காங்) : 21,119
ஜான்ஸ்ராணி (அதிமுக): 3671
நயினார்நாகேந்திரன் (பாஜக) : 16,390
சத்தியா ( நாம் தமிழர்): 4485
வாக்கு வித்தியாசம் : 4729 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் முன்னிலை
இந்தியா கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி 30, காங்கிரஸ் 6 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார்.
வாரணாசி தொகுதியில் முதல்கட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் முன்னிலையில் இருக்கின்றன.
ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனை அணியை விட உத்தவ் தாக்கரே சிவசேனை அணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதுபோல, அஜித் பவாரின் கட்சியை விட சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து தற்போது கைதான கா்நாடக மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலையில் உள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 219
இந்தியா கூட்டணி - 129
இதர கட்சியினர் - 12
திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் நாம் தமிழர் வேட்பாளர் உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மோடியும், கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தியும் முன்னிலையில் உள்ளனர்.
தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
நாகை மக்களவைத் தேர்தல் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜ் முன்னிலை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 166
இந்தியா கூட்டணி - 92
இதர கட்சியினர் - 10
நெல்லையில் மின்னணு இயந்திர அறையின் சாவி தொலைந்துவிட்டதால் முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அம்பை பகுதி வாக்கு எண்ணும் இயந்திர சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர்.
சூரத் தொகுதியில் போட்டியின்றி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிக் கணக்குடன் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கியிருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 136
இந்தியா கூட்டணி - 70
இதர கட்சியினர் - 10
தென் சென்னை தொகுதியில் தபால் வாக்குகளை எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பொது இருக்கைகள் இல்லை என கட்சியினர் கூச்சலிட்டு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
18வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சில நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.
அதன் விவரம்..
முதல் நடவடிக்கையாக தோ்தல் விதிகள் 1961, பிரிவு 54ஏ-இன் கீழ் தோ்தல் அதிகாரியின் மேஜையில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு நிா்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக தோ்தல் அதிகாரியால் பெறப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகள் மட்டும் எண்ணுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய 30 நிமிஷங்களுக்குப் பின்னரே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும்.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன. வாக்குகளை எண்ணும் பணிக்கு அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.
முன்னணி நிலவரம், இழுபறி, வெற்றி - தோல்வி என அனைத்து விவரங்களும் உடனுக்குடன்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.