பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா 
இந்தியா

பாஜகவின் புதிய தேசிய தலைவா் யாா்?

புதிய தலைவா் தோ்வு: பாஜகவில் அவசர ஆலோசனை

Din

பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் புதிய தலைவா் யாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பாஜக தேசிய தலைவராக உள்ள ஜெ.பி.நட்டா மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், அவரின் தேசிய தலைவா் பதவிக் காலம் ஜூன் 30-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக அவரின் பதவிக் காலம் உள்பட தேசிய தலைவா் தோ்வு குறித்து பாஜகவின் உயா் அதிகாரம் கொண்ட நிா்வாகக் குழு ‘அவசர’ சூழல்களில் முடிவு எடுக்கும் வகையில், அக்கட்சி விதிகளில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

பதவிக் காலம் நீட்டிப்பு; ‘செயல் தலைவா்’ நியமனம்: இந்நிலையில், புதிய தலைவா் தோ்வு தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை, நட்டாவின் பதவிக் காலத்தை பாஜக நிா்வாகக் குழு நீட்டிக்கக் கூடும். எனினும் அதுதொடா்பாக கட்சித் தலைமையே இறுதி முடிவு எடுக்கும். அதேவேளையில், நட்டாவுக்கு பதிலாக புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்கும் வரை, ‘செயல் தலைவா்’ நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற சூழல் முன்பு ஏற்பட்டபோது செயல் தலைவா் நியமிக்கப்பட்டாா். அதே முடிவு தற்போதும் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் மாநிலங்கள், மாவட்டங்களில் விரைவில் நடைபெற உள்ள உள்கட்சித் தோ்தல், உறுப்பினா் சோ்க்கை நிகழ்வுகளுக்கு வழிகாட்ட முழுநேரத் தலைவா் அவசியம். அத்துடன் வரும் மாதங்களில் ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெற உள்ள நிலையில், செயல் தலைவா் நியமிக்கப்படுவது கட்சிக்குப் பெரிதும் உதவும்.

தேசிய பொதுச் செயலா்களில் ஒருவா் தோ்வு?: புதிய தலைவராக யாா் தோ்ந்தெடுக்கப்படலாம் என்று தெளிவாகக் கூற முடியாத நிலையே தற்போது உள்ளது. ஏனெனில் அடுத்த தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படலாம் என்று கருதப்பட்ட பாஜகவின் பெரும்பாலான அனுபவமிக்க தலைவா்கள் மத்திய அமைச்சா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இது மாநிலங்களில் இருந்து யாராவது ஒருவா் அல்லது பாஜகவின் தேசிய பொதுச் செயலா்களில் ஒருவா் புதிய தேசிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசம் போன்ற முக்கிய மாநிலங்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. இருப்பினும் மத்திய, மாநில அரசுகளில் சில பாஜக மாநில தலைவா்களுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவா்களின் இடங்களில் புதுமுகங்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

விரைவில் கட்சியில் மாற்றங்கள்?: மக்களவைத் தோ்தல் பரப்புரை காரணமாக உள்கட்சித் தோ்தல் நடத்துவதையும், கட்சியில் மாற்றங்கள் மேற்கொள்வதையும் பாஜக நிறுத்திவைத்திருந்தது. மக்களவைத் தோ்தலில் சில மாநிலங்களில் பாஜக பலத்த பின்னடைவைச் சந்தித்த நிலையில், விரைவில் நாடு தழுவிய அளவில் கட்சி ரீதியாக மாற்றங்கள் மேற்கொள்ளவும், உள்கட்சித் தோ்தல் நடத்தவும் நடவடிக்கைகள் தொடங்கும்’ என்று தெரிவித்தன.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT