பாஜகவினரின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரசாரம் மகாராஷ்டிரத்தில் சில தொகுதிகளை இழக்க காரணம் என்று சிவசேனை கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிண்டே பேசியதாவது:
“எதிர்க்கட்சியினரின் தவறான பிரசாரத்தால் சில தொகுதிகளை நாங்கள் இழந்தோம். மகாராஷ்டிரத்தில் எங்கள் கூட்டணி பாதிப்பை சந்தித்தது.
400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பாஜகவினர் பிரசாரம் செய்தது, மக்களிடையே அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் போகிறார்கள் என்றும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றும் அச்சம் நிலவியது.” எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே, மத்திய அமைச்சரவையில் 7 மக்களவை உறுப்பினர்களை கொண்ட சிவசேனைக்கு கேபினேட் பதவி வழங்காமல், ஒரு எம்பியை கொண்ட கட்சிக்கெல்லாம் கேபினேட் பதவி கொடுத்துள்ளதாக ஷிண்டே அதிருப்தி தெரிவித்திருந்தார்.
அதேபோல், அஜித் பவார் தரப்பினரும் மத்திய இணையமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், ஷிண்டேவின் பேச்சு மகாராஷ்டிரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து ஷிண்டே விலகினால் மகாராஷ்டிரத்தில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்படும்.
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் பாஜக 9, ஷிண்டே அணி 7, அஜித் பவார் அணி ஒரு இடத்தை மட்டுமே வென்றிருந்தனர். இந்தியா கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.