முகப்பு
கோப்புப் படம்
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பணத்திற்காக தாயைக் கொன்ற மகன் கைது!

பணத்திற்காக தாயைக் கொன்று புதைத்த மகன் கைது

இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பணத்திற்காக தாயைக் கொன்ற மகன் கைது!

பணத்திற்காக தாயைக் கொன்று புதைத்த மகன் கைது

Updated On : 18 ஜூன், 2024 at 7:35 AM
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் சொத்திற்காக தாயைக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் எடா மாவட்டத்தில், 50 வயதான சீமா தேவி என்பவர் சில நாள்களாகக் காணவில்லையென, சீமா தேவியின் வளர்ப்பு மகன் ஹர்பால் காவல்துறையில் புகார் அளித்தார். ஹர்பால் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், சீமா தேவியின் மகனான ராமசங்கர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ராமசங்கரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்தான் சீமா தேவியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. ராமசங்கர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது, சீமா தேவி அவரது நிலத்தை விற்க முயன்றுள்ளார். நிலத்தை விற்றபின், அதன்மூலம் கிடைக்கின்ற பங்குகளில், தனக்கு பங்கு தரமாட்டார் என்று ராமசங்கர் நினைத்துள்ளார். இதனால் தான் ராமசங்கரும், அவரது நண்பர்களான ராம் பாபு மற்றும் நீரஜ் ஆகிய மூவரும் சேர்ந்து, சீமா தேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்ததுடன் சீமா தேவியின் உடலை புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ராமசங்கர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், கொலையில் தொடர்புடைய ராமசங்கரின் நண்பர்கள் இருவரையும் தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →