முகப்பு
இந்தியா

கோவை உள்பட 40 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதல், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 18 ஜூன், 2024 at 3:16 PM
பகிர்:

இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதல், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் உள்பட பாட்னா, ஜெய்ப்பூர், நாக்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில், அவை புரளி என்றே பெரும்பாலும் தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் காரணமாக பாட்னா, கோவை, ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிற்பகல் 12.40 மணி வரை 40 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாட்னா விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →