பிரதமர் மோடியை சந்தித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.. ANI
இந்தியா

பிரதமர் மோடியுடன் ஷேக் ஹசீனா சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று சந்தித்தனர்.

DIN

பிரதமர் நரேந்திர மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைநகர் தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஷ்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

சிறப்பு விருந்தினரான வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சி அமைத்த பிறகு முதல் விருந்தினராக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் ஹசீனா அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் தலைநகரில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை ஷேக் ஹசீனா சந்தித்தார்.

ஷேக் ஹசீனாவை பிரதமர் மோடி அன்பாக வரவேற்றார். இதனால் இந்தியா - வங்கதேசம் இடையேயான நட்பு மேலும் ஆழமானது. இருதரப்பிலும் பல துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏசி பெட்டியில் வழங்கப்படும் போர்வைகளுக்கு ஆபத்து! ரயில்வேக்கு புதிய தலைவலி

விஜய்க்கு பிரமாண்ட மாலை: 4 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் வெளியிட்ட விடியோ!

SCROLL FOR NEXT