முகப்பு
இந்தியா

மாநிலங்களவையில் 6 புதிய எம்பிக்கள் பதவியேற்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்கும் புதிய எம்.பி.க்களை தலைவர் ஜெகதீப் தங்கர் வரவேற்றார்.

Updated On : 27 ஜூன் 2024, 1:51 pm IST
புதிதாக தேர்வான 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு
பகிர்:

நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று தொடங்கியுள்ள நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்.பி.க்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

இரு அவைகளின் கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் அவைகளின் கூட்டுத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்கும் புதிய எம்.பி.க்களை தலைவர் ஜெகதீப் தங்கர் வரவேற்றார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்பி அகிலேஷ் பிரசாத் சிங்(பிகார்) முதலில் பதவியேற்றுக்கொண்டார். அதற்கடுத்து, ஜார்க்கண்டை சேர்ந்த ஜேஎம்எம்-ன் சர்பராஸ் அகமது மற்றும் பாஜகவின் பிரதீப் குமார் வர்மா பதவியேற்றனர்.

Advertisement

Advertisement

பின்னர், மத்தியப் பிறசேதத்தைச் சேர்ந்த பாஜகர் தலைவர்கள் பன்ஷிலால் குர்ஜார், மாயா நரோலியா மற்றும் பால்யோகி உமேஷ்நாத் ஆகியோரும் மாநிலங்களவையின் உறுப்பினராகப் பதவியேற்றனர்.

பாஜகவைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் காங்கிரசை சேர்ந்த ஒருவரும் இந்தியில் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பின்போது பிரதமர் நரேந்திர மோடி, அவைத் தலைவர் ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments