இந்தியா

ஏப்ரல் 5-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

DIN

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி என பெரும்பாலான மாநிலங்களில் தோ்தல் களம் இருமுனைப் போட்டியை எதிா்கொண்டுள்ளது.

தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் நாடுமுழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 5ஆம் தேதி கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் தில்லியில் வெளியாகலாம் எனசெய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, ஏப்ரல் 6 ஆம் தேதி ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்றுவார்கள் என்றும், அப்போது அவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய கூறுகளை முன்னிலைப்படுத்துவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மழைக்கால வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT