பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து 5 பேர் பலி!
நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழையால் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்குவதற்காக சுரங்கம் அருகே வீடு கட்டப்பட்டது. கனமழை காரணமாக நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. தேவையான நடவடிக்கைகளக்குப் பிறகு அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படும்.
Advertisement
Advertisement
கனமழையால் அதே பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பலியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மாகாணத்தின் ஹர்னாயில் ஒரு சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு வெடித்ததில் 12 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பலியான சில நாள்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.