முகப்பு
இந்தியா

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இந்தியா கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார் பிரியங்கா காந்தி.

Updated On : 19 மே, 2024 at 4:36 PM
பிரியங்கா காந்தி
பகிர்:

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்தியா கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் உஜ்வல் ராமன் சிங்கை ஆதரித்து இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொதுமக்கள் முன்பு உரையாற்றினர். அவர்களின் உரையைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பை விடியோவாக பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

''இந்தியா கூட்டணிக்காக கூடிய மாபெரும் கூட்டம் இது. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்களை முன்னேற்ற வேண்டும். ஜுன் 4ஆம் தேதிக்கான முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்யப்போகிறார்கள்'' என பிரியங்கா பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →