உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய சமூக வலைதளமாக வாட்ஸ் ஆப் இருக்கிறது.
பயன்பாட்டுக்கு மிகவும் எளிதாக இருப்பதால் தனிப்பட்ட காரணங்களுக்கு மட்டுமின்றி அலுவலகப் பணிகளுக்கும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முகநூல் நிறுவனமானது, வாட்ஸ் ஆப்பை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய சேவைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் ஒரு செய்தியை டெலீட்(delete) செய்தால் அதை திரும்ப பெறும்(undo) வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் முன்னதாக அறிமுகப்படுத்தியது
அதேபோல், நாம் தவறுதலாக அனுப்பிய செய்தியை நீக்க(delete) டெலிட் ஃபார் எவ்ரி ஒன்(delete for everyone) என்பதுக்கு பதிலாக டெலிட் ஃபார் மீ (delete for me) என்று கொடுத்துவிட்டால், அந்த செய்தியை நம்மால் திரும்பப் பெற இயலாது.
இதனால் அந்தச் செய்தி நமது வாட்ஸ்-ஆப் சேட்டிலிருந்து நீங்கிவிடுமே தவிர, செய்தியை பெற்றவர்கள் அந்த செய்தியை பார்க்க முடியும். பிறகு நம்மால் அதனை டெலீட் செய்ய முடியாமல் போய்விடும்.
இந்தப் பிரச்னையை போக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு செய்தியை டெலிட் ஃபார் மீ (delete for me) என்று கொடுத்துவிட்ட அடுத்த 5 வினாடி வரை அன்டூ(undo) பாப் அப்பில் தெரியும். 5 வினாடிக்குள் அன்டூ (undo) செய்துவிட்டால் அந்தச் செய்தியை நாம் சாட் பாக்ஸில் திரும்பப் பெறலாம். உடனடியாக அதனை டெலீட் எவ்ரி ஒன் என்ற வசதி மூலம் யாரும் பார்க்காத வகையில் நீக்கியும் விடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.