இந்தியா

மக்களவை 6-ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!

மக்களவை 6-ஆம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் இன்று(மே 23) மாலை நிறைவடைந்தது.

DIN

மக்களவை 6-ஆம் கட்ட தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று(மே 23) மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

இத்தொகுதிகளில் வரும் சனிக்கிழமை (மே 25) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

8-ஆவது மக்களவையை தோ்வுசெய்ய ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

6-ஆம் கட்டமாக, உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு மே 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

அனந்த்நாக்-ரஜெளரி தொகுதிக்கு மே 7-ஆம் தேதி (3-ஆம் கட்டம்) வாக்குப்பதிவு நடைபெறவிருந்தது. மோசமான வானிலை காரணமாக, இத்தோ்தல் 6-ஆம் கட்டத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் மாநில சட்டப் பேரவைக்கும் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கெனவே இருகட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. மே 25-இல் நடைபெறவிருக்கும் 3-ஆம் கட்ட தோ்தலில் 42 பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT