இந்தியா

ராம பக்தர்களால் நாட்டின் மரியாதை அதிகரிக்கிறது: உ.பி. முதல்வர்

ராமரை அயோத்திக்குக் கொண்டுவந்தவர்களை, நாங்கள் மீண்டும் பிரதமராகக் கொண்டுவருவோம்...

DIN

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ராம பக்தர்களுக்கும், துரோகிகளுக்கும் இடையேயான தேர்தல் இது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

கேரக்பூரில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். பேரணியில் பேசிய அவர்,

1986இல் வீர் பகதூர் சிங் முதல்வராக இருந்தபோது ராமர் கோயிலின் பூட்டு திறக்கப்பட்டதால் கோரக்பூர் நமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏன் மோடியை மக்கள் அதிகம் நேசிக்கின்றனர்.

ராமரை அயோத்திக்குக் கொண்டுவந்தவர்களை, நாங்கள் மீண்டும் பிரதமராகக் கொண்டுவருவோம் என்று மக்கள் கூறுகின்றனர்.

நடந்துமுடிந்து ஆறுகட்டத் தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்ததைப் பார்க்கும்போது பிரதமர் மோடி 400-க்கும் அதிகமாக தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக சாடிய முதல்வர் யோகி, இருவரின் குணமும் ராமருக்கு எதிரானது. ராம பக்தர் தான் ஆட்சிக்கு வருவார்கள். ராமபக்தர்களால் நாட்டின் மரியாதை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.மாநிலத்தில் நான்கு வழி, ஆறு வழி நெடுஞ்சாலைகள் கட்டப்படுகின்றன.

எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம், விமான நிலையங்கள் கட்டுவது ராம பக்தர்களின் பங்களிப்பு. ஏழைகள் இன்று ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். கிசான் சம்மன் நிதியில் விவசாயிகள் பலன்களைப் பெறுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் உஜ்வாலா எரிவாயு இணைப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று காலை முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் கோயிலில் வழிபாடு மேற்கொண்டு, மறைந்த தனது குரு மஹந்த் அவேத்யநாத்தின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

உத்தரப் பிரதேசத்தில் 4 மக்களவைத் தொFதிகளுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் அவர், திங்கள் இரவு கோரக்நாத் கோயிலில் தங்கினார். செவ்வாய்க்கிழமை காலை சிவபெருமானின் அவதாரமான மகாயோகி குரு கோரக்நாத்தை வழிபட்டு, அங்கு பெற்றோர்களுடன் வந்த குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT