DOTCOM
இந்தியா

பாஜகவை எதிர்ப்பதற்காக என் மீது 24 வழக்குகள் பதிவு: ராகுல் காந்தி

“எனது எம்பி பதவியை பறித்து, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்கள்.”

DIN

பாஜகவை எதிர்த்து போராடுவதற்காக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஒடிஸாவில் நாளை மறுநாள் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், ஒடிஸா மாநிலம் பாலசோரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“ஜெகந்நாதர் மோடியின் பக்தர் என்று பாஜக தலைவர் கூறுகிறார். இதுதான் பாஜகவின் ஆணவத்துக்கான சாட்சி. ஏழைகளுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தவுடன், ஏழைகளில் பழக்கவழக்கங்களை அரசு கெடுக்கிறது என்று ஊடகவியலாளர்கள் கூறுவார்கள். ஆனால், நாங்கள் அவர்களின் பேச்சைக் கேட்க மாட்டோம். ஏனெனில், அவர்கள் அம்பானி, அதானியின் ஆட்கள். நாங்கள் நாட்டின் ஏழைகள், விவசாயிகளின் பேச்சை மட்டுமே கேட்போம்.

நான் பாஜகவுக்கு எதிராக போராடுகிறேன். அதனால், என் மீது அவதூறு மற்றும் குற்ற வழக்குகள் உள்பட 24 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். எனது மக்களவை உறுப்பினர் பதவியை பறித்து இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தனர். அமலாக்கத்துறை 50 மணிநேரம் என்னிடம் விசாரணை நடத்தியது. ஆனால், பாஜகவுக்கு எதிராக உண்மையில் நவீன் பட்நாயக் போராடுகிறார் என்றால், அவர் மீது ஏன் வழக்கு போடவில்லை?” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒளிவீசும் நிலா... ஐஸ்வர்யா லட்சுமி!

Madharasi review - கஜினி பாணியில் சிவகார்த்திகேயன்! அமரனை வெல்லுமா Madharasi? திரை விமர்சனம்

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

SCROLL FOR NEXT