முகப்பு
இந்தியா

கருத்துக் கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது!

கருத்துக் கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது என்று பவன் கேரா தெரிவித்துள்ளார்.

Updated On : 31 மே 2024, 7:35 pm IST
பகிர்:

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக யாரும் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பவன் கேரா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை ஏற்கேனவே பதிவு செய்துள்ளனர், அவர்கள் மூலம் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும். அதற்கு முன்பு, டிஆர்பிக்காக நடத்தப்படும் சண்டைகள் மற்றும் ஊக விவாதங்களில் ஈடுபட எந்த காரணமும் எங்களுக்கு தென்படவில்லை.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள். ஜூன் 4க்கு பிறகு விவாதங்களில் மகிழ்ச்சியுடன் பங்கேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.