இந்தியா

பழங்குடியினரிடமிருந்து நீர், நிலம், காடுகளைப் பறிக்க நினைக்கிறது பாஜக! - ராகுல்

பழங்குடியினரின் நீர், நிலம், காடு ஆகியவற்றை பாஜக பறிக்க நினைக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

DIN

பழங்குடியினரின் நீர், நிலம், காடு ஆகியவற்றை பாஜக பறிக்க நினைக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நவ. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தல் நெருங்குவதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பழங்குடியினர்கள் மத்தியில் பேசியதாவது:

'பழங்குடியினராகிய உங்களின் நீர், நிலம், காடு ஆகியவற்றை பாஜக பறிக்க நினைக்கிறது.

பிர்சா முண்டா, உங்களுக்கான நீர், நிலம், காடு ஆகியவற்றை பாதுகாக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார். இன்று நாங்களும் உங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம்.

பழங்குடி என்றால் நாட்டின் முதல் உரிமையாளர் என்று பொருள். இந்த நாட்டின் மீது உங்களுக்கு முதல் உரிமை உள்ளது.

நாட்டில் பழங்குடியினர்கள் தங்கள் உரிமையைப் பெற போராடும்போது பாஜக அவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. ஏன் தலித் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்கூட ஆதரவு தெரிவிக்கவில்லை.

இன்று நீங்கள் எந்தவொரு வேலையையும் செய்யலாம். ஆனால், உங்கள் வழி அடைக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும்போது பிரதமர் மோடி அமைதியாக இருந்தார்.

நாட்டின் 90% மக்கள் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் அம்பானி-அதானி போன்ற ஒரு சிலரால் நாட்டை நடத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.

இந்தியாவில் தற்போது இரண்டு கொள்கைகள் இருக்கின்றன. ஒன்று இந்தியா கூட்டணி, மற்றொன்று பாஜக - ஆர்எஸ்எஸ்.

இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க நினைக்கிறது இந்தியா கூட்டணி. ஆனால், அதனை அழிக்க நினைக்கிறது பாஜக.

இந்திய அரசியலமைப்பு என்பது ஒரு புத்தகம் மட்டுமல்ல. பிர்சா முண்டா, அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் கருத்துகள் அடங்கியுள்ள ஒன்று. இது பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை மக்களை பாதுகாக்கிறது. எனவே, இந்த நாடு இந்திய அரசியலமைப்பால் ஆளப்பட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது' என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT