ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆகப் பதிவு!
ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்..
ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
ஜம்மு காஷ்மீரில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ஜார்க்கண்ட்: மனைவியுடன் வாக்களித்தார் முதல்வர் ஹேமந்த் சோரன்!
ஆப்கானிஸ்தான் பகுதியில் காலை 10.43 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், கட்டடங்கள் குலுங்கிய நிலையில், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.