முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர முதல்வரின் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை!

மகாராஷ்டிர முதல்வரின் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை செய்தது பற்றி...

Updated On : 13 நவம்பர், 2024 at 11:37 AM
மகாராஷ்டிர முதல்வரின் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் ஆய்வு
பகிர்:

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பயணித்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இறுதி கட்டப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், பால்கர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் முதல்வரும் சிவசேனை(ஷிண்டே அணி) தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பயணித்துள்ளார்.

அவரது ஹெலிகாப்டர் பால்கரில் தரையிறங்கியபோது, தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஷிண்டே கொண்டு வந்த பை உள்ளிட்டவற்றிலும் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டதாகவும், தேர்தலில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பயணித்த ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →