முகப்பு
இந்தியா

ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த மாநிலத்தை உருவாக்க வாக்களியுங்கள்: அமித் ஷா!

ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்க வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Updated On : 13 நவம்பர், 2024 at 3:51 AM
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
பகிர்:

ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்க வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் முதற்கட்டமாக 43 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம்: பிரியங்கா காந்தி!

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜார்க்கண்டில் முதல் கட்ட வாக்குப்பதிவில் வாக்களிக்கப் போகும் அனைத்து வாக்காளர்களும் ஊழல், ஊடுருவல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதற்கான வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்: பிரதமர் மோடி!

பழங்குடியினரின் அடையாளம், நிலம், பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பாதுகாக்க ஜார்க்கண்ட் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட்டில் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
முழு கட்டுரையைப் படிக்க →