முகப்பு
ஜக்தீஷ் சிங் பதானி - திஷா பதானி
இந்தியா

கங்குவா நடிகையின் தந்தையிடம் ரூ. 25 லட்சம் மோசடி!

அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஜக்தீஷ் சிங் பதானியிடம் ரூ. 25 லட்சம் மோசடி

இந்தியா

கங்குவா நடிகையின் தந்தையிடம் ரூ. 25 லட்சம் மோசடி!

அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஜக்தீஷ் சிங் பதானியிடம் ரூ. 25 லட்சம் மோசடி

Updated On : 16 நவம்பர், 2024 at 7:41 AM
ஜக்தீஷ் சிங் பதானி - திஷா பதானி
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் ஜக்தீஷ் பதானிக்கு அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் கதாநாயகியான திஷா பதானியின் தந்தை ஜக்தீஷ் சிங் பதானி துணை காவல் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். உத்தரப் பிரதேசத்தின் பரேய்லியில் வசிக்கும் இவரை, சமீபத்தில் தொடர்பு கொண்ட ஷிவேந்திர பிரதாப் சிங் என்பவர், ஜக்தீஷுக்கு அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். மேலும், அவரை தனது கூட்டாளிகளிடமும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார், ஷிவேந்திர பிரதாப்.

இந்த நிலையில், ஜக்தீஷுக்கு அரசியலில் அல்லது உயர்மட்ட அரசுப்பணி வாங்கித் தருவதாக ஷிவேந்திர பிரதாப் பொய்யான வாக்குறுதி அளித்திருந்தார். மேலும், அதற்கு பணம் தேவைப்படும் என்றும் கோரியுள்ளனர். இதனை நம்பிய ஜக்தீஷ், ரொக்கமாக ரூ. 5 லட்சமும், ரூ. 20 லட்சத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளிலும் செலுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பணம் செலுத்தி 3 மாதங்களாகியும், எவ்வித பதவியோ பதிலோ அளிக்காமல் இருந்ததால், கொடுத்த பணத்தை ஜக்தீஷ் கோரியுள்ளார்.

இருப்பினும், கண்டிப்பாக பதவி அளிக்கப்படும் என்று ஷிவேந்திராவும் அவரது கூட்டாளிகளும் சமாளித்துள்ளனர். இருந்தபோதிலும், பணத்தைத் தந்தால் மட்டும் போதும் என்று ஜக்தீஷ், ஷிவேந்திராவின் கூட்டாளிகளைத் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில், பணத்தையும் தரவியலாது; பதவியும் ஒன்றும் கிடையாது என்று ஷிவேந்திரா கூறியுள்ளார்.

இதனையடுத்து, தன்னை மோசடி செய்து விட்டதாக ஷிவேந்திர பிரதாப் மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் ஜக்தீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளைக் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →