முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.

Updated On : 16 நவம்பர், 2024 at 11:05 AM
பகிர்:

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மணிக்கொண்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று(சனிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது.

தீ பற்றியதையடுத்து குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Advertisement

விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை 6 மணியளவில் குடியிருப்பின் 3-வது தளத்தில் சமையறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டி வெடித்தததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் எந்த பாதிப்பும் இல்லை.

தீ விபத்தினால் வீட்டில் இருந்த பணம், உடைகள் என சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.