ஜம்மு காஷ்மீர் என்றாலே மனதுக்குள் ஒரு சில்லென்ற உணர்வு தோன்றும். அந்த வகையில், ஸ்ரீநகரில், இந்த குளிர்காலத்தின் முதல் நாளாக நேற்று இரவு பூஜ்யத்தில் குளிர்நிலை பதிவாகியிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை இரவு, அதிக குளிர் காணப்பட்டது. நள்ளிரவில், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் குளிர்நிலைடி உறைநிலைக்குச் சென்றது. ஸ்ரீநகரில் குளிர்நிலை 0.7 டிகிரி செல்சியஸ் அளவுக்குச் சென்றதால், கடுங்குளிர் உணரப்பட்டது.
ஸ்ரீநகர் மட்டுமின்றி பல இடங்களில், பூஜ்யத்திலும் ஒருசில இடங்களில் மைனஸ் அளவிலும் குளிர்நிலை பதிவாகியிருக்கிறது.
இதையும் படிக்க.. நட்சத்திர ஹோட்டலில் ஒரு தேநீர் விலை இவ்வளவா? வரியும் சேர்த்தால்!
காஸிகுண்ட் பகுதியில் -1.6 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியிருந்தது. சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் பகல்காமில் -3.7 டிகிரி செல்சியஸ் அளவில் இருந்தது குளிர்நிலை. இங்கு அதிக குளிர்பகுதியாக பகல்காம் இருக்கிறது. குல்மார்க் பகுதியிலும் 0.8 டிகிரி செல்சியஸ் ஆகவும், கோகெர்நாக் பகுதி மட்டுமே ஓரளவுக்கு குளிரிலிருந்து தப்பி 1.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது.
இதே நிலைதான் நவ. 23 வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு, லேசான மழை அல்லது பனிமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.