இந்தியா

வயநாடு தேர்தல் வெற்றி: சான்றிதழைப் பெற்றார் பிரியங்கா காந்தி!

வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றார் பிரியங்கா காந்தி.

DIN

வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் இன்று வழங்கினர்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவ. 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நவ. 23 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயளாலர் பிரியங்கா காந்தி 6.22 லட்சம் வாக்குகள் பெற்றதுடன், 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 6.47 லட்சம் வாக்குகளைப் பெற்று, 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராகுலைவிட பிரியங்கா குறைவான வாக்குகளை பெற்றிருந்தாலும் ராகுலின் வாக்கு வித்தியாசத்தை பிரியங்கா முறியடித்து சாதனை படைத்தார்.

இதையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தில்லியில் பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் இன்று வழங்கினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அப்போது உடனிருந்தார்.

தன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு ஆதரவு அளித்த வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்தார்.

மேலும் வயநாடு தொகுதி பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

கடலோரம்... பவித்ரா லட்சுமி!

SCROLL FOR NEXT