பிரதி படம்  Center-Center-Chennai
இந்தியா

ஆக்ரா பல்கலை.யில் நடந்த மிகப் பயங்கர தேர்வு மோசடி: வெளிச்சத்துக்கு வந்தது எப்படி

ஆக்ரா பல்கலை.யில் தேர்வு மோசடி வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

DIN

ஆக்ரா: ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட மூன்று கல்லூரிகளில், நடந்து வரும் பருவத் தேர்வில் மிகப் பயங்கர மோசடி நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 2,000 இளைஞர்கள், பெண்கள் பெயரில் தேர்வுகாக விண்ணப்பத்து, மூன்று தனியார் கல்லூரிகள் சார்பாக தேர்வெழுதியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள மூன்று தனியார் கல்லூரிகளில் இந்த மோசடி நடந்திருப்பதாகவவும், இவை சுயநிதி கல்லூரிகள், இங்கு பெண்கள்தான் அதிகம் பயில்கிறார்கள், கல்லூரியே தேர்வு நடத்தி, கல்லூரி பேராசிரியர்களே இங்கு கண்காணிப்பாளர்களாகவும் செயல்படுவார்கள் என்பதே மோசடிக்கு முக்கிய காரணம்.

அதாவது, பல்கலையில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விடவும் மூன்று வேளைகளில் நடந்த தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், சந்தேகம் எழுந்து தேர்வு குறித்து விசாரிக்கப்பட்டது.

இதையடுத்தே, கல்லூரிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை பரிசோதித்தபோது, மோசடி நடந்தது தெரிய வந்தது. அதாவது, மாணவிகளுக்கு பதிலாக ஏராளமான இளைஞர்கள் அந்த தேர்வை எழுதியிருந்ததும், தேர்வறை முழுவதும் இளைஞர்களே இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, மூன்று கல்லூரிகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

பொதுவாக மோசடி என்றால், ஏதோ ஒரு சில மாணவர்கள் ஈடுபடுவார்கள். ஆனால், இங்கு கல்லூரி நிர்வாகமே மாணவிகளுக்குப் பதிலாக ஏதோ கூலி வேலைக்கு ஆள் எடுப்பது போல ஏராளமான இளைஞர்களை அழைத்துவந்து தேர்வெழுத வைத்திருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

SCROLL FOR NEXT