காயத்ரி  
இந்தியா

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி காலமானார்

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி இளம் வயதில் காலமான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி இளம் வயதில் காலமான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சுவலி காரணமாக நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மறைந்த காயத்ரி காதல் திருமணம் செய்துகொண்டதால், அவரிடம் ராஜேந்திர பிரசாத் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

உத்தரகண்ட்: திருமண வீட்டார் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 30 பேர் பலி

அதன் பின்னர் மனம் மாறி, சமீபத்தில் தான் காயத்ரியை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இளம் வயதில் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காலமான நிகழ்வு தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காயத்ரி மறைவிற்கு நானி, ஜூனியர் என்டிஆர், நவ்தீப் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT