FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உறவு சிக்கல்கள்

புதுமுகங்கள் பால்ராஜ், காயத்ரி ரேமா, சுவேதா ஸ்ரீ உள்ளிட்ட புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்துள்ள 'யார்ரா அந்தப் பையன் நான்தான் அந்தப் பையன்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.

Updated On : 8 மார்ச் 2026, 4:16 am IST
பகிர்:

புதுமுகங்கள் பால்ராஜ், காயத்ரி ரேமா, சுவேதா ஸ்ரீ உள்ளிட்ட புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்துள்ள 'யார்ரா அந்தப் பையன் நான்தான் அந்தப் பையன்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.

எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவு, நண்பர்கள் மாற்றி எழுதும் வாழ்வு என சிக்கல்கள் ஏராளம்.

எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது மனித வாழ்வுக்கு அப்படியே பொருந்தும். ஆனால், நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால், அந்த வாழ்க்கை என்னவாகும்... அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணிக்கிறது.

Advertisement

Advertisement

காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்தக் கதை வழக்கமான பார்வைதான். நவீன வாழ்க்கை என்பது ஏராளமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வகையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பெண்கள் நிறைய படிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்களோடு பழகுகிற, நட்பு பாராட்டுகிற, காதலிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், நவீன வாழ்க்கை அளிக்கும் தொழில்நுட்ப முன்னேற்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்கிற மனம், வேறு திசையில் தற்போது பயணிக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments