பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
பெங்களூரு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்...
கர்நாடகத்தில் தசரா விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் நாளை(அக். 16) முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. பெங்களூரு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை(அக். 16) விடுமுறை அளித்து பெங்களூரு நகர் மாவட்ட ஆட்சியர் ஜெகதீஷா இன்று(அக். 15) மாலை உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் வால்மீகி ஜெயந்தியையொட்டி வியாழக்கிழமை(அக்.17) பொது விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை(அக்.15) காலை 8.30 மணி நிலவரப்படி, பெங்களூரில் 33 மி.மீ., மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.