விமானம் 
இந்தியா

இன்று ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வியாழக்கிழமை ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது நாள்தோறும் தொடர்கதையாகிவரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ விமான நிறுவனங்களின் தலா 20 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆகாசா விமான நிறுவனத்தின் 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் கடந்த 11 நாள்களில் மட்டும் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் கூறுகையில், விமானங்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறையினருடனும் பேசி வருகிறோம். அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளன.

விமான நிறுவனங்களுக்கு வரும் போலியான வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு வேண்டுமென்றே போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களை, இனி வாழ்நாள் முழுக்க விமானத்தில் பறக்கத் தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 170 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சில விமானங்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

இது தொடர்பாக, தில்லி காவல்துறை 8 தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறது. இதுபோன்ற போலியான மிரட்டல்களை விடுவோரைக் கண்டுபிடிக்க, காவல்துறையினர் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் நாடியுள்ளனர். இந்த சம்பவங்களால், நாட்டின் விமானப் போக்குவரத்து, கடுமையான பொருளாதார பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று இதுபோன்ற மிரட்டல்களால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன, சில ரத்து செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT