dotcom
இந்தியா

ராகுல் காந்தி வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்!

சீக்கியர்கள் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டின் முன்பாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

சீக்கியர்கள் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டின் முன்பாக பாஜகவின் சீக்கிய அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் சீக்கியர்கள் குறித்துப் பேசினார்.

'சில மதங்கள், மொழிகள், சமூகங்களை ஆர்எஸ்எஸ் மற்றவர்களைவிட தாழ்வாகப் பார்க்கிறது. இந்தியாவில் இதற்குத்தான் சண்டை நடக்கிறது. அரசியலுக்கானது அல்ல' என்று பேசினார்.

மேலும் அங்கிருந்த சீக்கியர் ஒருவரிடம், 'இந்தியாவில், ஒரு சீக்கியர், தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா அல்லது குருத்வாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பதற்கே சண்டை நடக்கிறது. இது சீக்கியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்' என்று கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் 10, ஜன்பத் பகுதியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டின் முன்பாக பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜகவின் சீக்கிய அமைப்பினர் விக்யான் பவனில் இருந்து பேரணியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கோஷமிட்டனர். மேலும் 1984 கலவரத்தில் சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரினர்.

அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும் மீறி பேரணியில் ஈடுபட்டதால் பாஜக மூத்த தலைவர் ஆர்.பி. சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

ராமராஜன் - கனகா சந்திப்பு!

அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு!

தில்லியில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சீனாவின் ஆளுங்கட்சியினர் சந்திப்பு!

ஊர்க்காவலர் பணியில் திருநங்கைகள்! பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

SCROLL FOR NEXT