FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மக்கள்தொகை கூடுவது சுமை அல்ல, சொத்து! ராகுல் காந்தி

மக்கள்தொகை அதிகரிப்பு குறித்து ராகுல் காந்தியின் கருத்து...

Updated On : 11 பிப்ரவரி 2026, 2:36 pm IST
ராகுல் காந்தி
பகிர்:

நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பை சுமையாக கருதக்கூடாது, அது நமது சொத்து என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை உரையாற்றினார்.

அப்போது, இந்திய மக்கள்தொகையைக் குறிவைத்து அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இருதரப்புக்கும் சரிசமமாக இருக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.

Advertisement

Advertisement

அவர் பேசியதாவது:

”டாலரும், அமெரிக்க மேலாதிக்கமும் சவாலுக்கு உள்ளாகி இருக்கின்றன. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான போட்டியில், மிகவும் மதிப்புமிக்க ஒரு சொத்து இந்திய தரவுகள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா வல்லரசாக தொடர விரும்பினால், டாலரைப் பாதுகாக்க விரும்பினால், அதற்கான வழி இந்தியர்கள்தான்.

மக்கள்தொகை கூடுவது சுமை என்றும், பேரழிவு என்றும் பலர் சொல்கிறார்கள். ஆனால், மக்கள்தொகைதான் நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து. அது நமது பலம்.

நாங்கள் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், முதலில் கூறுவது, சமமாக பேச வேண்டும், உங்களின் ஊழியர்களை போல் நடத்தக் கூடாது. இரண்டாவது எங்களின் எரிசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம். அடுத்து, உங்கள் விவசாயிகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்பது புரிகிறது. ஆனால், நாங்கள் எங்களின் விவசாயிகளை பாதுகாப்போம்” எனத் தெரிவித்தார்.

summary

Population growth is not a burden, it is an asset! Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments