முகப்பு
இந்தியா

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 17 செப்டம்பர், 2024 at 10:21 AM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளையொட்டி பாஜகவினரும், அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்ல விழாவில் பங்கேற்றது ஏன்? - பிரதமர் மோடி விளக்கம்!

இதேபோல் மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தியும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பிறந்த நாள் வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி. நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பயங்கரவாதியை காப்பாற்றப் போராடிய குடும்பத்தை சேர்ந்தவர் அதிஷி! ஸ்வாதி மலிவால்

முழு கட்டுரையைப் படிக்க →