முகப்பு
இந்தியா

உச்சநீதிமன்ற யூ டியூப் சேனல் முடக்கம்!

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், தற்காலிகமாக யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 11:34 AM
பகிர்:

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், தற்காலிகமாக யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வில் விசாரணைக்கு வரும் வழக்குகள் மற்றும் பொது நலன் சார்ந்த வழக்கு விசாரணைகளை உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனலில் நேரலை செய்வது வழக்கம்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்ததாக இன்று(செப். 20) காலை தகவல் வெளியானது.

உச்ச நீதிமன்றத்தின் யூ டியூப் பக்கத்தில் 'ரிப்பிள்' என்ற பெயரில் கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்தும் வீடியோக்கள் இடம்பெற்றன.

இதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நேரலை செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டன.

யூ டியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட உச்சநீதிமன்ற சேனல்

தொடர்ந்து யூ டியூப் பக்கத்தில் இருந்து உச்சநீதிமன்ற சேனல் நீக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சேவை தொடரும் என்றும் உச்சநீதிமன்ற ஐ.டி. பிரிவின் பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மையில், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் வழக்குகள் நேரலை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →