பிரதமர் மோடியிடம் அதானிக்காக மட்டும் கடவுள் ஏன் உதவி கேட்கிறார்? - ராகுல் காந்தி பேச்சு
அதானிக்காக மட்டும் பிரதமர் மோடியிடம் கடவுள் எப்படி உதவி கேட்கிறார் என்று புரியவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
அதானிக்காக மட்டும் பிரதமர் மோடியிடம் கடவுள் எப்படி உதவி கேட்கிறார் என்று புரியவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று பல்வேறு பகுதிகளில் பேரணியில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், 'தான் மனிதர் அல்ல, பிறப்பால் தொடர்பில்லாதவர்(உயிரியல் ரீதியாகப் பிறக்கவில்லை), கடவுளுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்று பிரதமர் மோடியே கூறுகிறார். கடவுள் எதைச் செய்யச் சொல்கிறாரோ, அதை செய்வேன் என்று கூறுகிறார். அதானிக்காக மட்டும் கடவுள் எப்படி உதவி கேட்கிறார் என்று புரியவில்லை. பிரதமர் மோடி என்ன செய்தாலும் அது பணக்காரர்களுக்கு மட்டும்தான். விவசாயிகளுக்காக எதுவும் செய்வதில்லை.
Advertisement
Advertisement
ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் முதலில் செய்வது விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார் விலையை வழங்குவோம். ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்குவோம். இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு. மேலும் இந்த வேலைவாய்ப்பு அனைத்து சாதியினருக்கும் சரிசமமாக வழங்கப்படும். மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்' என்று பேசினார்.
ஹரியாணாவில் வருகிற அக். 5 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அக். 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.