உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப் படம்) PTI
இந்தியா

மேலாதிக்கத்தை ஒருபோதும் இந்தியா திணிக்காது: உ.பி. முதல்வர்

விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்றும் பேச்சு

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் தும்ரியாகஞ்ச்சில் குரு கோரக்ஷநாத் ஞானஸ்தலி கல்வி மையத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசியதாவது, ``தனது மனைவி சீதையைத் தேடி ராமர் இலங்கையை வென்றார். இலங்கை மன்னன் ராவணனைத் தோற்கடித்த பிறகு, ராஜ்ஜியத்தை விபீஷனிடம் ஒப்படைத்தார். இதேபோல், கிஷ்கிந்தாவில் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு முடிசூட்டினார். ராமர் மற்றும் கிருஷ்ணரை கட்டுக்கதைகள் என்று நிராகரித்து, இந்திய பாரம்பரியங்களை அவமதிப்பதற்காக சிலர் பார்த்தனர்.

தேசியவாதம், கலாசாரம், தாய்நாட்டின் மரபுகளுடன் கல்வி ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்தியா இனி பின்தொடர்பவர் அல்ல; அது தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். புதிய இந்தியா தனது வலிமையையும் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது.

வலிமை, நுண்ணறிவு, பிரம்மாண்டத்தின் அடிப்படையில் இந்தியா எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், அது ஒருபோதும் தனது மேலாதிக்கத்தை யார் மீதும் திணிக்காது; யாருடைய மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா அனைத்து துறைகளிலும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்தியாவின் பாரம்பரியம் எப்போதும் அறிவை மதிக்கிறது. அனைத்து திசைகளிலிருந்தும் அறிவின் ஓட்டத்தைத் தழுவுவது முன்னேற்றத்திற்கு அவசியம். இந்தியாவின் அறிவுசார் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, வேதங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT