திருமணம்  கோப்புப்படம்.
இந்தியா

நாக்பூர்: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு

நாக்பூரில் பெண் மருத்துவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

நாக்பூரில் பெண் மருத்துவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள இமாம்வாடா காவல் நிலையத்தில் 28 வயது பெண் மருத்துவர் வெள்ளிக்கிழமை புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கும் ஐபிஎஸ் அதிகாரிக்கும் சமூக ஊடகத் தளமான இன்ஸ்டா மூலம் கடந்த 2022ஆம் ஆண்டு நட்பு ஏற்பட்டது. அப்போது அவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

அதே நேரத்தில் தான் எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்து வந்தேன். பின்னர் எங்களின் ஆன்லைன் உரையாடல்கள் விரைவில் தொலைபேசி அழைப்புகளாக மாறியது. நண்பர்களான பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து தன்னுடன் உடல் உறவில் ஈடுபட்டார்.

என் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது: தீபக் சஹார்

ஆனால் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவுடன் அவர் தன்னை தவிர்க்கத் தொடங்கினார்.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டார். அந்த அதிகாரியின் குடும்பத்தினரும் தனக்கு பதிலளிக்கவில்லை. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வருத்தமடைந்த அந்த மருத்துவர் இமாம்வாடா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், சனிக்கிழமை ஐபிஎஸ் அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்பூரை வென்றது டெல்லி!

கிருஷ்ணாபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற விஏஓ உயிரிழப்பு

லாபா அசத்தல்; பிரிட்ஸ் அதிரடி: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி

டிரம்பப்பின் போா் நிறுத்த திட்டம்: எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு

25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT