இந்தியா

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஜெய்சங்கா் சந்திப்பு: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு.

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதுதொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக குடியரசுத்தலைவரிடம் அமைச்சர்கள் விளக்கமளிப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் வரத் தடை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப். 27 முதல் ரத்து செய்யப்படுவதாகவும் மருத்துவ விசாக்களுக்கு ஏப். 29 வரை காலக்கெடு நிர்ணயித்தும் அதற்குள்ளாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பஹல்காம் தாக்குதல் தொடர்பாகவும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்தும் ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விளக்கமளித்தும் வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது

மக்களை பற்றி கவலைப்படாத திமுக அரசு: நயினாா் நாகேந்திரன்

இரு மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது: கே.எம். காதா்மொகிதீன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்ஐஆா் படிவங்கள் வழங்க நவ. 22, 23 இல் சிறப்பு முகாம்

பணி ஓய்வு பெறுகிறாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்!

SCROLL FOR NEXT