தொடா்ந்து 5-ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் எதிர்வினை...
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போா்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடா்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இருநாடுகளை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனா்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘பாரமுல்லா, குப்வாரா மற்றும் அக்னூா் செக்டாா் பகுதிகளில் ஏப்.28 மற்றும் 29 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடியை தந்தது’ என்றாா்.
Advertisement
Advertisement
இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிா்சேதம் ஏற்பட்டதற்கான உடனடி தகவல்கள் இல்லை.
பாரமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களின் எல்லையையொட்டிய பகுதிகளைத் தொடா்ந்து பூஞ்ச் மற்றும் அக்னூா் செக்டாா்களிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.