பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.
வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஹசன் மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா 2024ல் கைது செய்யபட்டார்.
இதையடுத்து எம்எல்ஏ, எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த நிலையில், விசாரணை முடிவடைந்ததும் அவர் குற்றவாளி என நேற்று அறிவித்தது.
தொடர்ந்து இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு 14 மாதங்களில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி 8 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோதே பிரஜ்வல் ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இன்றும் அவர் நீதிமன்றத்தில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.
பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.