அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜராகியிருப்பது குறித்து...
ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று(ஆக. 5) ஆஜரானார்.
அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வங்கிக் கடனை சட்டவிரோதமாக பரிவா்த்தனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கடந்த ஜூலை 24-ஆம் தேதிமுதல் 3 நாள்களுக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்குத் தொடா்புள்ள 50 நிறுவனங்கள், 25 பேருக்குச் சொந்தமான 35 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அந்த இடங்களில் அனில் அம்பானி குழும நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களும் அடங்கும்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள தில்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆக.5-ஆம் தேதி ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அவரின் குழும நிறுவனங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், அனில் அம்பானி தில்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Anil Ambani appeared before the Enforcement Directorate in Delhi today (Aug. 5) for questioning in connection with financial irregularities and bank loan fraud worth over Rs 17,000 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.