ஹுமாயூன் கல்லறை வளாக கூரை இடிந்து விபத்து: உள்ளே சிக்கிய 8 பேரின் கதி என்ன?
ஹுமாயூன் கல்லறை வளாக கூரை இடிந்து விபத்து: உள்ளே சிக்கிய 8 பேரின் கதி என்ன? என்பது குறித்து...
தில்லியில் ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் கூரையின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.
தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமாயூனின் கல்லறையின் ஒரு குவிமாடம் வெள்ளிக்கிழமை மாலையில் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கல்லறை வளாகத்தில் உள்ளே 8 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஹுமாயூனின் கல்லறை, தில்லியில் உள்ள ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவிமாடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கல்லறையின் கட்டமைப்பு பலவீனமடைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Portion of roof in Humayun's tomb complex collapses in Delhi, at least 8 feared trapped
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.